About Us

Rudra Kshetram Gurukulam is a world resource for study,research and dissemination of spiritual science. It offers continual many residential courses and youth camps for students as well as corporate seminars and retreats for professionals and business persons. Graduation Deetchai and certificate will be given for all level courses from basic to advance level. "RUTHRA GHOSHAM" IS OUR ESTEEM GOAL.. ருத்ரா ஷேத்ரம் குருகுலம், பாரம்பரிய ஆன்மீகமான இரகசியமான "ருத்ர கோஷத்தை" பரப்பவும், ஆராயவும் மற்றும் படிக்கவும் உலகிற்கொரு ஆதாரமாக விளங்குகிறது..இங்கு குருகுல முறையில் தங்கி ஆன்மீகப் பாடங்களை படிக்கலாம்.


ருத்ரா ஷேத்ரம் குருகுலம், பாரம்பரிய ஆன்மீகமான இரகசியமான “ருத்ர கோஷத்தை” பரப்பவும், ஆராயவும் மற்றும் படிக்கவும் உலகிற்கொரு ஆதாரமாக விளங்குகிறது..இங்கு குருகுல முறையில் தங்கி ஆன்மீகப் பாடங்களை படிக்கலாம்.
மாணவர்களுக்கான முகாம்களும், பெருநிறுவனங்களுக்கு கருத்தரங்குகளும், தொழில் செய்பவர்களுக்கும், வேலையில் இருப்போர்க்கும் தனியாக வகுப்புகளும் நடைபெறுகின்றன.. இந்த குருகுலம் அறிவுப் பூர்வமான பாடங்கள் மூலம் ஆன்மீக ஞானத்தை பரப்பி வருகிறது.ஆர்வமுள்ள ஆன்மாக்களை ஊக்குவிக்கிறது. குருகுலத்தின் சுதந்திரமான அணுகுமுறை, அறிவாற்றலை நிச்சயம் பெருக்கும் !!

இங்கே தாங்கள் கற்கக் கூடியவை :

🔹தனக்காக வீட்டிலே செய்து கொள்ளக் கூடிய எளிமையான சித்த வைத்திய முறைகள்.

🔹புராதனமான, ஆன்மீக குருகுல பாடசாலை முறை மூலம், பண்டைய யோக கலாச்சாரத்தை உணர முடியும்.

🔹பக்தி − கிரியா − யோகம் − ஞானம் − ஜீவன் முக்தி

🔹குழந்தைகளும், பெரியவர்களும் மனவளத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்.மனக் குழப்பங்கள் நீக்கப்பட்டு தெளிவு பெறும்.

🔹ஞானமடைந்த பல்வேறு சித்தர்களும், ஞானிகளும் போதித்த, வெவ்வேறு வகையான யோகங்கள், தியானம் மற்றும் யோக நித்திரை முறைகள், வேதம், பதஞ்சலி மாமகரிஷியின் யோக சூத்திரங்கள் மற்றும் தந்திரம் போதிக்கப்படும். உடல் நலத்தைக் காக்க ஹதயோக பிரதீபிகா, சிவ−சம்ஹிதை மற்றும் கோரக்ஷ−சதகம் போன்ற புனிதமான நூல்களில் கூறப்பட்டுள்ள முறைகளில் யோகம் கற்கலாம். பலவகையான பிராணாயாம மூச்சுப் பயிற்சிகள் போதிக்கப்படும்.அதை தியானத்திலும், யோக நித்திரையிலும் பயன்படுத்தும் உத்திகளும் போதிக்கப்படும்.

🔹 பாடங்கள் : பக்தி இலக்கியங்கள், புராண இதிகாசங்கள் மற்றும் உபநிஷதங்கள் போதிக்கப்படும்..

☑ ஆரம்ப நிலையிலிருந்து, மேம்பட்ட நிலைகள் வரைக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். தகுதி அடைந்த பின்னர் தீட்சை வழங்கப்படும்.
விருப்பமுள்ள சாதகர்களுக்கு சன்யாசமும், பிரம்மச்சரியமும் போதிக்கப்பட்டு, தீட்சை வழங்கப்படும் !!

♦ ” ருத்ர கோஷம் ”
♦ எங்கள் குறிக்கோள் – சரணாகதியும் – பரகதியும்

எங்கள் குருகுலத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வாருங்கள்

Highlight Features